கொரோனா நோயாளிகள் பீதி அடைந்து மருத்துவமனைகளுக்கு ஓடத் தேவையில்லை - அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், பீதி அடைந்து மருத்துவமனைகளுக்கு ஓடத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், தேவைப்படும் நபர்களுக்கே ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டும் என்றார். அதே சமயம் சரியான புரிதல் இன்றி, தனக்கு ஆக்சிஜன் தேவைப்படும் என்று அனைவரும் நினைப்பது சரியல்ல என்றார். பெரும்பாலான கொரோனா நோயாளிகள், மருத்துவர் ஆலோசனை பெற்று வீட்டில் இருந்தபடியே குணம் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதை சுகாதார அமைச்சராக அல்லாமல், ஒரு மருத்துவராக சொல்வதாக ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதுவரை 16 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
Comments