கொரோனா தடுப்பு, சிகிச்சைப் பணிகளில் ராணுவத்தின் தயார்நிலை - பிரதமர் மோடியிடம் ராணுவ தளபதி எம்.எம்.நரவணே தகவல்
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ராணுவம் எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.
இன்று தம்மை சந்தித்த ராணுவ தளபதி எம்எம் நரவணேயிடம் கொரோனா தடுப்புக்கு ராணுவம் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என அவர் கேட்டறிந்தார்.
அப்போது, ராணுவத்தை சேர்ந்த பல மருத்துவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தளபதி நரவணே கூறியதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல இடங்களில் ராணுவம் கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து வருவதாகவும் நரவணே பிரதமரிடம் தெரிவித்தார்.
Comments