சாலையோர பேனர் விழுந்ததில் டூ வீலரில் சென்ற பெண் பலி... லிப்ட் கேட்டு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

0 9799

தஞ்சை அருகே கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் விழுந்ததால் சாலையில் இரு சக்கரவாகனத்தில் சென்ற பெண் பரிதாபமாக பலியானார்.

தஞ்சை மாவட்டம்திருவோணம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து வீரப்பன் என்பவர் மரணமடைந்தார். இவரது படத்திறப்பு விழாவை முன்னிட்ட்டு மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் மிக பிரம்மாண்டமான அளவில் முத்துவீரப்பனின் மகன் ரவிச்சந்திரன்  பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அம்மணி பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மனைவி விஜயராணி தன் சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடத்தில் லிப்ட் கேட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மேட்டுப்பட்டி வந்தபொழுது ரவிச்சந்திரன் வைத்திருந்த பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர் விஜயராணி சென்ற இரு சக்கர வாகனம் மீது விழுந்தது. இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் விஜயராணியும் வாகனத்தை ஓட்டியவரும் பலத்த காயமடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் விஜயராணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியோடு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவோணம் காவல்துறையினர் பேனர் வைத்த ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே , பலத்த காயமடைந்த விஜயராணி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தும் போனார்.

சென்னை உயர்நீதிமன்றம் சாலை ஓரங்களில் பொதுமக்களில் இடர்பாடு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டும் எந்த பலனும் இல்லை. அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை.

இதனால்தான், இது போன்ற அகால மரணங்கள் நிகழ்கின்றன என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments