வாக்கு எண்ணிக்கை முகவர்கள் எப்போது கொரோனா சோதனை செய்ய வேண்டும் ? தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்
வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்கள், கொரோனா தடுப்பூசியை வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டுமா அல்லது 48 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டுமா உள்ளிட்ட சில ஐயங்களை தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணையத்தை திமுக கேட்டுக் கொண்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையருக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் திமுக அமைப்புச் செயலர் ஆர்எஸ் பாரதி அனுப்பி உள்ள மனுவில், இது குறித்து இரண்டு விதமான சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.
அது போன்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் அனுமதி என கூறியுள்ளதால் அது முதல் டோஸ் மட்டுமா அல்லது 2 டோசுகளா என கேள்வி எழுப்பி உள்ள அவர், 2 ஆம் டோஸ் போடுவதற்கு பலருக்கு கால அவகாசம் வாய்த்திருக்காது அல்லது தடுப்பூசி பற்றாக்குறை நிலவலாம் என்பதால் அதையும் தெளிவு படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments