சென்னையில் சொத்து தகராறு காரணமாக கணவன், மனைவியை உறவினர்கள் தாக்கியதில் கணவர் உயிரிழப்பு

0 1406
சென்னையில் சொத்து தகராறு காரணமாக கணவன், மனைவியை உறவினர்கள் தாக்கியதில் கணவர் உயிரிழப்பு

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் சொத்து தகராறு காரணமாக கணவன், மனைவியை உறவினர்கள் தாக்கியதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பேசின் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம்-சாலம்மாள் தம்பதியினருக்கு ராமலிங்கம், சிகாமணி, வாசுகி, சாந்தமூர்த்தி உள்ளிட்ட 7 பிள்ளைகள் உள்ள நிலையில், இவர்களுக்கிடையே பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு ராமலிங்கம் வீட்டின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக வந்த அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், சிகாமணியின் மனைவி மேரி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் வாசுகி மற்றும் அவரது கணவர் மோகனை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

அதில், மோகன் உயிரிழந்த நிலையில், வாசுகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேரியை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments