கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்

0 3177
கொரோனா தடுப்பூசி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்

கொரோனா தடுப்பூசி குறித்து புரளி பரப்பவோ, பதற்ற நிலையை உருவாக்கவோ கூடாது, கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக அரசுக்கு 2 லட்ச ரூபாய்க்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

தடுப்பூசி தொடர்பாக மத்திய மாநில அரசுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது சென்னை மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவரது முன்ஜாமீன் மனுவை ,சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

விசாரணையின்போது, திட்டமிட்டு அது போன்ற கருத்துகளை தெரிவிக்கவில்லை எனவும், தன்னை அறியாமல் பேசி விட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments