அமெரிக்கா, சீனாவுடன் போட்டி போட மட்டுமே விரும்புகிறது, மோதல் இல்லை - அதிபர் ஜோ பைடன்
அமெரிக்கா, சீனாவுடன் போட்டி போட மட்டுமே விரும்புகிறது என்றும் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என அதிபர் ஷி ஜிங்பிங்கிடம் தாம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
பதவியேற்று 100 நாட்கள் ஆவதை ஒட்டி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நிகழ்த்திய தமது முதலாவது உரையில் பைடன் சீனா பற்றிக் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் நேட்டோ படைகளை வைத்திருப்பதை போல, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வலுவான ராணுவத்தை நிறுத்தும் என்ற அவர், அது மோதலுக்காக அல்ல, மோதலை தவிர்ப்பதற்காக மட்டுமே எனவும் சீன அதிபரிடம் கூறியதாக ஜோ பைடன் தெரிவித்தார்.
இரு தரப்பு வர்த்தக மோதல் உள்ளிட்டவற்றால் அமெரிக்க-சீன உறவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் இவ்வாறு பேசியுள்ளார். சீனாவுடன் வர்த்தக போட்டியில் ஈடுபட ஏதுவாக 1.8 டிரில்லியன் டாலர் நிதி கோரும் மசோதாவையும் அவர் தாக்கல் செய்தார்
Comments