லாபம் இல்லாததால், உலகின் மிகப்பெரிய தீயணைப்பு விமானத்தின் சேவை நிறுத்திவைப்பு

0 3115

ட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயை அணைக்க பயன்பட்டு வந்த, உலகின் மிகப்பெரிய குளோபல் சூப்பர் டேங்கர் விமானத்தின் சேவை, லாபம் இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

உருவத்திலும், கொள்ளளவிலும் பிரமாண்டத்தை கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய தீயணைப்பு விமானமான போயிங் 747-400 சூப்பர் டேங்கரை 400 முதல் 800 அடி வரை தாழ்வாக இயக்கமுடியும். தீயணைப்பு பணிக்காக இந்த சூப்பர்டேங்கர் விமானம் கடந்த ஆண்டு மட்டும் 119 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த விமானத்தின்மூலம் 74ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொண்டு செல்லமுடியும். கடந்த 2017 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, பொலிவியாவில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட  தீ உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றிய இந்த விமானத்தால், லாபம் இல்லை எனக்கூறி அதன் சேவையை நிறுத்திவைக்க முடிவுக்கு செய்துள்ளதாக முதலீட்டு நிறுவனமான ஆல்டர்னா கேபிடல் பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments