ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா உறுதி
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சுனிதாவுக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இன்று அசோக் கெலாட்டுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதே நேரம் தமக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் இருந்து அரசு பணிகளை கவனிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அசோக் கெலாட் கொரோனா தொற்றில் இருந்து விடுபட மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Comments