கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டிசிவிர் மருந்தை வாங்க நீண்ட வரிசை..! அதிகாலை 3 மணி முதல் மருத்துவக் கல்லூரி வாயிலில் காத்திருப்பு
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தை வாங்க ஏராளாமனோர் நாள் கணக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டோக்கன் முறையில் மருந்து விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கிச் செல்கின்றனர்.
ரெம்டிசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை என பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்திருந்த போதிலும் பல தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை பரிசீலிப்பதால், வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறும் பொதுமக்கள், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் ஒரு குப்பி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை அரசு தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments