ரூ.75கோடி சம்பளம் பெற்ற ரிலையன்ஸ் மூத்த அதிகாரி..! பணத்தையும், பதவியையும் துறந்து ஜைன மதத் துறவியானார்

0 23831
ரூ.75கோடி சம்பளம் பெற்ற ரிலையன்ஸ் மூத்த அதிகாரி..! பணத்தையும், பதவியையும் துறந்து ஜைன மதத் துறவியானார்

ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் அனைத்தையும் துறந்து ஜைன மத துறவி ஆகி உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்தவர் பிரகாஷ் ஷா. அந்நிறுவனத்தில் திட்டப் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடனேயே ஆடம்பர வாழ்க்கையைத் துறந்தார்.

கடந்த 25-ம் தேதி வெள்ளை ஆடை உடுத்தி ஜைன துறவிக்கான தீட்சையை பெற்ற இவருடன் மனைவி நைனா ஷாவும் துறவறம் பூண்டுள்ளார். ஓய்வுபெறும்போது இவரது ஆண்டு சம்பளம் 75 கோடி ரூபாயாகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments