மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியத்திற்கு கொரோனா சிகிச்சை ரயில் பெட்டிகள் :அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

0 1864
மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியத்திற்கு கொரோனா சிகிச்சை ரயில் பெட்டிகள் :அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்))

த்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவுக்கு, கொரோனா சிகிச்சை வசதிகளுடன்கூடிய ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், மஹாராஷ்டிர மாநிலம், நந்த்ருபர் ரயில் நிலையத்தில், கொரோனா சிகிச்சைக்காக, 292 படுக்கை வசதிகளுடன் கூடிய, 24 ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.

இது தவிர நாக்பூரில், சரக்கு பெட்டக முனையத்தில், 170 படுக்கைகளுடன், 11 ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், இதில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன என்றும் கூறினார்.

மத்திய பிரதேசத்தில், தெஹ்ரி ரயில் நிலையத்தில், 320 படுக்கை வசதிகளுடன், 20 ரயில் பெட்டிகள், அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் பியுஸ் கோயல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments