கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.100 குறைப்பு -சீரம் இந்தியா அறிவிப்பு
மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் விலை நானூறு ரூபாயில் இருந்து முந்நூறு ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் விலையை மத்திய அரசுக்கு 150 ரூபாயும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாயும், தனியாருக்கு 600 ரூபாயும் என நிர்ணயித்துள்ளதாக முதலில் நிர்ணயித்தது.
விலையைக் குறைக்க வேண்டும் எனப் பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு 400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக விலையைக் குறைத்துள்ளதாக சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இந்த விலைக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
Comments