18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியது

0 4456
18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியது

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இணையத்தளத்திலும், செயலிகளிலும் தொடங்கியுள்ளது.

மே முதல் நாளில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது, உமாங் செயலிகள் ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இணையவழி முன்பதிவு மாலை 4 மணிக்குத் தொடங்கியது. https://www.cowin.gov.in/home கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது, உமாங் செயலிகளில் பயனாளிகளின் செல்பேசி எண்ணைப் பதிவு செய்தால் ஓடிபி எண் வரும்.

அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டு அதன்பின் மற்ற விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments