திருவள்ளூரில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வை-ஃபை எந்திரங்களைக் கொண்டு செல்ல முயற்சி

0 2654
திருவள்ளூரில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வை-ஃபை எந்திரங்களைக் கொண்டு செல்ல முயற்சி

திருவள்ளூரில், வாக்கு எண்ணும் மையத்துக்குள் wi-fi எந்திரங்களைக் கொண்டு செல்ல முயன்றதற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு எந்திரங்கள் பெருமாள்பட்டு தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு wi-fi இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் கொண்டு வந்ததை கண்ட முகவர்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணையதள சேவைக்கு இணைப்பு வழங்குவதற்கு பதில் wi-fi எந்திரங்களை மாற்றி தவறுதலாக கொண்டு வந்துவிட்டதாக கூறி பின்னர் அதனை திருப்பி எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments