"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சிவகளை தொல்லியில் ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த கல் வட்டங்கள் கண்டெடுப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெற்று வரும் தொல்லியில் ஆய்வு பணியில் முதன் முறையாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கல் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
அங்குள்ள ஸ்ரீ மூலக்கரை பகுதியில் கல்வட்டங்கள் ஒவ்வொன்றும் 10க்கு 10 என்ற அளவில் இருந்தன. சுமார் 15க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் இங்கு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய தொல்லியல் துறையினர், மொத்தம் 29 முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தனர்.
மூடியுடன் கிடைத்த 3 முதுமக்கள் தாழியை, முதற்கட்டமாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக அகழ்வாய்வு பணியில் ஈடுடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.
Comments