இந்தியன் 2 - தயாரிப்பு நிறுவனத்திடம் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வி

0 10688

இந்தியன் 2 பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சு தோல்வியடைந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments