டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் குவிப்பு
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுத் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைநகரப் பகுதி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள அந்தச் சட்டப்படி டெல்லி அரசு என்றாலே துணைநிலை ஆளுநர்தான் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசு, துணைநிலை ஆளுநரின் கருத்தைக் கேட்காமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.
Comments