இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டும் வெளிநாடுகள் : 1 கோடி டாலர் நிதி உதவி அளிப்பதாக கனடா அரசு அறிவிப்பு

0 2819
இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டும் வெளிநாடுகள் : 1 கோடி டாலர் நிதி உதவி அளிப்பதாக கனடா அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு, ஒரு கோடி டாலர் நிதி உதவி வழங்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.

கனடா செஞ்சிலுவை சங்கம் மூலம் இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்த தொகை வழங்கப்படும் என்று கனடாவின் சர்வதேச மேம்பாட்டுத்துறை அமைச்சர் கரினா கோல்ட் தெரிவித்துள்ளார்.

அதே போன்று சிங்கப்பூர் அரசும் இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது. 256 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு சி 130 என்ற இரு சிங்கப்பூர் விமானப் படை விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.

சிங்கப்பூர் அமைச்சர் மாலிகி ஓஸ்மான் விமானங்களை கொடியசைத்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.

இதனிடையே துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து 9 ஆக்சிஜன் கன்டெய்னர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு எடுத்துவரப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments