இலங்கையில் புர்கா அணிய தடைவிதிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல்

0 4227
இலங்கையில் புர்கா அணிய தடைவிதிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல்

லங்கையில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கும் தீர்மானத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அங்கு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 260 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து இலங்கையில் புர்கா அணிவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் முகம் உள்ளிட்ட உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகள் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என்று இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பொதுவெளியில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments