சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை
சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சோலார் சிஸ்டம்ஸ்‘ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த சரிதா நாயர், கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவரிடம் 42 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதால் , கடந்த 5 நாட்களுக்கு முன் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கில் 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், முதல் குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் மீதான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
Comments