அதிகத் தொற்று, குறைவான தடுப்பூசி போன்றவற்றால் இந்தியா கொரோனா என்ற புயலில் சிக்கியுள்ளது: WHO
அதிகமான மக்கள் கூட்டம், அதிகரிக்கும் தொற்று, குறைவான தடுப்பூசி போன்றவற்றால் இந்தியா கொரோனா என்ற புயலில் சிக்கியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 7வது நாளாக தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்காக 4 ஆயிரம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை உலக சுகாதார மையம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அம்மையத்தின் செய்தித் தொடர்பாளர் தரிக் ஜசரேவிக், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படுவதாகவும், அதற்கும் குறைவானவர்களுக்கே ஆக்ஸிஜன் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தொற்று ஏற்பட்ட அனைவரும் மருத்துவமனைக்குச் செல்வதால் குழப்பம் ஏற்படுவதாகவும் தரிக் தெரிவித்துள்ளார்.
Comments