கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்..!
கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக விழுப்புரம், எர்ணாகுளம், பாட்னா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இயங்கும் சிறப்பு ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் இருந்து காரக்பூர் வரை செல்லும் ரயில்களில் Sleeper class-ல் 4 பெட்டிகளும் இரண்டாம் வகுப்பில் 3 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. மே மாதத் துவக்கத்தில் இருந்து ஜுன் மாதத் தொடக்கம் வரை இவ்வாறு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விழுப்புரத்தில் இருந்து புருலியா மற்றும் எர்ணாகுளத்திலிருந்து பாட்னா செல்லும் ரயில்களுக்கும் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Comments