இந்தியாவில் கொரோனா பரவல் எதிரொலி..! சிவில் நிர்வாகத்திற்கு உதவ நேரம் வந்து விட்டது -தளபதி பிபின் ராவத் பேச்சு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிவில் நிர்வாகத்திற்கு பாதுகாப்பு படை உதவுவதற்கான நேரம் வந்து விட்டதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், பாதுகாப்பு படையினர் ஒரு அசாதாரண சூழ்நிலையில் வழக்கத்தை விட சிறப்பாக செயல்படவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவவும் நேரம் வந்துவிட்டது என்றார்.
சீருடையில் இருக்கும் நமது ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்போதுமே தடைகளை உடைத்து முன்னேறும் அர்ப்பணிப்பும் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், நாம் இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது’என தெரிவித்துள்ளார்.
Comments