விசாரணைக் கைதி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
திண்டுக்கல் வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி லாக்கப்பில் வைத்து அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு மொட்டணம்பட்டி கோவில் திருவிழாவில் செந்தில் குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டியதாக சுரேஷ் குமார் என்பவர் வடமதுரை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
செந்தில்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற சார்பு ஆய்வாளர் திருமலை முத்துச்சாமி, தலைமைக் காவலர்கள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோர் அவரை அடித்தே கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார்.
Comments