டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை : பிரான்சில் இருந்து 21 கருவிகள் இறக்குமதி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, உடனடியாக ஆக்சிஜனை பயன்படுத்தும் விதத்தில் 21 கருவிகளை பிரான்சில் இருந்து இறக்குமதி செய்வதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் தேவை இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் அந்த கருவிகள் நிறுவப்படும் என்று அவர் கூறினார்.
அதே போன்று பாங்காக்கில் இருந்து 18 ஆக்சிஜன் டேங்கர்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதனை கொண்டு வருவதற்கு விமானப் படை விமானங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.
Comments