தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பொதுப்பணித்துறை மூலம் கூடுதல் படுக்கைகள் அமைக்கும்பணி தீவிரம்

0 2807
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பொதுப்பணித்துறை மூலம் கூடுதல் படுக்கைகள் அமைக்கும்பணி தீவிரம்

மிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுப்பணித்துறை மூலம் கூடுதல் படுக்கைகள் அமைக்கும்பணி நடைபெற்றுவருகிறது.

கொரோனா முதல் அலையின்போது பொதுப்பணித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 138 மருத்துவமனைகளில் 21,692 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கூடுதலாக, 12,370 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 550 படுக்கைகளும், ஸ்டான்லி மருத்துவமனையில் 500 படுக்கைகளும் கூடுதலாக அமைக்கப்பட்டுவருகின்றன.

இதேபோல் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கிண்டி கிங் மருத்துவமனை உட்பட சென்னை முழுவதும் ஆயிரத்து 420 ஆக்சிஜன்களுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments