ரெம்டிசிவிர் மருந்தை வாங்க கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் திரண்ட மக்கள்

0 2452
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டிசிவிர் மருந்தை வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் திரண்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டிசிவிர் மருந்தை வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் திரண்டனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் மருந்துக்கு  தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்கிய பரிந்துரை மற்றும் உரிய ஆவணங்களை காட்டி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்தை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சென்னை மட்டுமின்றி, வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வரிசையில் நின்று ரெம்டிசிவிர் மருந்தை வாங்கிசென்றனர். அதிகபட்சமாக ஒருநபருக்கு 6 வயல் வழங்கப்படுகிறது. ஒருவயலின் விலை 1,545 ரூபாயாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments