கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களுக்கு 1,268 டன் திரவ ஆக்ஸிஜனை அனுப்பிய ஒடிசா
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களுக்கு ஆயிரத்து 268 டன் ஆக்ஸிஜனை ஒடிசா மாநிலம் அனுப்பியுள்ளது.
ரூர்கேலா, ஜஜ்பூர், தெங்கனல் மற்றும் அங்கூல் ஆலைகளில் இருந்து உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.
நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில், ஒடிசா உபரி திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பல மாநிலங்களுக்கு அனுப்புகிறது.
அந்த மாநிலத்தில் உள்ள 5 ஆலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 350 டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.
Comments