ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக 4 மாதங்களுக்கு திறக்கலாம் - தமிழக அரசு தீர்மானம்

0 2062
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக 4 மாதங்களுக்கு திறக்கலாம் - தமிழக அரசு தீர்மானம்

க்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிப்பது என்றும்  4 மாதங்களுக்கு மட்டுமே ஆலையை திறப்பது என்றும் தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்த ஆலையில்  தாமிர உற்பத்தி உட்பட எவ்வித உற்பத்தி அலகையும் திறக்க, இயக்க அனுமதியில்லை என்றும்,  உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் மீண்டும் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும், பணிகளை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments