உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அளவு, நாளொன்றுக்கு 300லிருந்து 600 டன்னாக அதிகரிப்பு - டாடா ஸ்டீல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உற்பத்தி செய்து வினியோகித்து வரும் ஆக்சிஜன் அளவை, நாளொன்றுக்கு 300லிருந்து 600 டன்னாக டாடா ஸ்டீல் நிறுவனம் அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மனித உயிர்களை காப்பதற்காக, மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அந்த நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய ஸ்டீல் அமைச்சகம் அறிவுறுத்தலின்படி, நாட்டில் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மாநில அரசுகள், மருத்துவமனைகளுக்கு தேவையான திரவ மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன.
Comments