இந்தியாவில் 15 நாட்களுக்கு சரக்கு விமான சேவை ரத்து: சீனாவின் சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

0 3211

சீனாவின் மிகப் பெரிய சரக்கு போக்குவரத்து விமான நிறுவனமான சிச்சுவான் ஏர்லைன்ஸ், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, 15 நாட்களுக்கு விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

இந்தியாவிற்கு ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை வழங்கி உதவ தயார் என்று சீன அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தனியார் நிறுவனங்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் 6 வழித்தடங்களில் 10 விமானங்களை சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments