ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு வசதி முழுவதும், மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜன் தயாரிக்க உபயோகிக்கப்படும்: வேதாந்தா நிறுவனம்
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு வசதி முழுவதும், மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜன் தயாரிக்க உபயோகிக்கப்படும் என வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் தயாரிப்பு வசதி உள்ளதாகவும், அவ்வசதி முழுவதையும் மருத்துவ தரத்திலான ஆக்சிஜன் தயாரிக்கப் பயன்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தயாரிக்கப்படும் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் தமிழகம் முழுவதும் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லவும், நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் போக்குவரத்து ஏற்பாடு குறித்து வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments