அதிகரிக்கும் கொரோனா 2வது அலை: இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ள வெளிநாடுகள்!
கொரோனா 2வது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.
இந்தியாவுக்கு 600க்கும் கூடுதலான முக்கிய மருத்துவ சாதனங்கள் அனுப்பி வைக்கப்படும் என இங்கிலாந்து நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது. 2ம் கட்டமாக மீண்டும் உபகரணங்கள் வழங்கப்படும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதே போன்று ஜெர்மனியும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. இதற்காக பிரத்யேக திட்டத்தை தயாரித்து வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
அதே போன்று அமெரிக்காவும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்திற்கான மூலப் பொருட்கள்,அதிவேக ஆக்சிஜன் தயாரிப்பிற்கான உபகரணங்களை அனுப்பி வைக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதே போன்று பிரான்சும் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க முன்வந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Comments