ககன்யான் திட்டத்துக்காக சிறப்பு செயற்கைக்கோளை அனுப்ப உள்ளது இஸ்ரோ !
ககன்யான் திட்டத்துக்காக சிறப்பு செயற்கைக்கோள் இஸ்ரோ அனுப்ப உள்ளது.
இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவில் இருந்து முதன் முதலாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற பெயரில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய திட்டப் பணிகளை மேற்கொண்டு உள்ளது.
திட்டத்தின் முதல் படியாக வருகிற டிசம்பர் மாதம் ஆளில்லா விண்கலத்தை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இந்த நிலையில் விண்வெளி வீரர்களுடன் ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட பிறகு அந்த விண்கலத்துடனான தொடர்புக்கு உதவும் வகையில் சிறப்பு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments