பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம்
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்கவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணி மீது ஐ.பி.எல். விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Comments