தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பரவாயில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
கொரோனா தடுப்பு பணிகளை பொறுத்தவரை, பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பரவாயில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்படையில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தக் கோரி தொடர்ந்த பொது நல வழக்கு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் பல கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரபபு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Comments