உள்நாட்டு விமான பயண கட்டண விலை கட்டுப்பாட்டு வரம்பு நீட்டிப்பு
உள்நாட்டு விமான பயணக்கட்டணங்கள் மீதான விலை கட்டுப்பாட்டு வரம்பு நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இயக்கப்பட்ட விமான சேவைகளில் 80 சதவிகிதம் மட்டுமே அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை படுவேகமாக இருப்பதால் விமான பயண முன்பதிவு எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விமான நிறுவனங்கள் அரசிடம் முறையிட்டன.
எனவே உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை 60 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைக்குமாறும் அவை கேட்டுக் கொண்டன. இந்த நிலையில் இந்த அறிவிப்புகளை விமானப்போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது
Comments