அடுத்த இரண்டு வாரங்களுக்கு கர்நாடகாவில் கொரோனா ஊரடங்கு - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
அடுத்த இரண்டு வாரங்களுக்கு கர்நாடகாவில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் இதைத் தெரிவித்த அவர் நாளை இரவு 9 மணி முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றார். காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். கட்டுமானம், உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து முடக்கப்பட்டு பேருந்து இயக்கம் நிறுத்தப்படும் எனவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 34 ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 134 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதை அடுத்து ஊரடங்கு முடிவு எடியூரப்பா எடுத்துள்ளார். ஊரடங்கிற்குப் பிறகும் கொரோனா தொற்று குறையவில்லை என்றால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனஅவர் தெரிவித்துள்ளார்.18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனவும் எடியூரப்பா தெரிவித்தார்.
Comments