தமிழில் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்
புதிய கல்விக் கொள்கையை தமிழ் மொழியில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் குஜராத்தி உள்ளிட்ட 17 பிராந்திய மொழிகளில் தேசிய கல்விக் கொள்கையை கடந்த சனிக்கிழமை, மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. தமிழ் மொழியில் வெளியிடாததற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழி பெயர்ப்பை 155 பக்கங்களில் மத்திய கல்வி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு தாக்கல் செய்த பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து 2020- ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Comments