கொரோனா நிலவரம் குறித்த போலியான அல்லது தவறான செய்திகளை பரப்பும் 100 க்கும் அதிகமான சமூகவலைதள பதிவுகளை நீக்க மத்திய அரசு உத்தரவு
நாட்டின் கொரோனா நிலவரம் குறித்த போலியான அல்லது தவறான செய்திகளை பரப்புகின்றன என்பதால் 100 க்கும் மேற்பட்ட டுவிட்டர், ஃபேஸ்புக், யுடியூப் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் இணையதள லிங்குகளை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா குறித்து மக்கள் பீதியடையும் வகையில் இந்த பதிவுகள் உள்ளதாக அரசு கருதுகிறது. கொரோனா இரண்டாம் அலையை அரசு கையாளுவது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பல டுவிட்டர் பதிவுகளை நீக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டது.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் வெளியாகும் பதிவுகள் மட்டுமே உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் நீக்கப்படுவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.
Comments