18-44 வயது பிரிவினருக்கு தனியாரில் மட்டுமே தடுப்பூசி போடப்படும் - சுகாதார அமைச்சக செயலர்

0 8110

18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வரும் ஒன்றாம் தேதி இந்த பிரிவினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவங்குகிறது.

அதில் தடுப்பூசி போட விரும்புபவர்கள் CoWIN  தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளை சேர்ந்த ஏராளமானோர் தடுப்பூசி போட வாய்ப்புள்ளது என்பதால் அனைத்து தனியார் தடுப்பூசி மையங்களுக்கும் போதிய பாதுகாப்பை அளிக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதே நேரம் மாநில, யூனியன் பிரதேச அரசுகள், தடுப்பூசி போடுவதற்கான தங்களது வயது வரம்பை 45 ல் இருந்து குறைத்தால், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரசு தடுப்பூசி மையங்களில் சென்று ஊசி போட்டுக் கொள்ளலாம் எனவும் சுகாதார அமைச்சக  செயலர் மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments