ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் ... முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது

0 3054

க்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தலாமே என உச்சநீதிமன்றம் யோசனை கூறியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மூடப்பட்டு கிடக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு  மீதான விசாரணையின்போது, ஸ்டெர்லைட்டை திறக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தலாமே என உச்சநீதிமன்றம் யோசனை கூறியது.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ சௌந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணை செயலாளர் வீரபாண்டியன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் கே.டி.ராகவன் பங்கேற்றனர்.

காங்கிரஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments