கொரோனா நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது , கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள் - சுந்தர் பிச்சை
இந்தியாவில் கொரோனா நிலைமை மோசமடைந்து வருவது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனமும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவுக்கும், யூனிசெப்புக்கும் வழங்குவதாக அவர் கூறியுள்ளார். மருத்துவ உதவிகள், அதிக தொற்று அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும்.
கொரோனா விழிப்புணர்வு குறித்த முக்கிய தகவல்களை பகிரவும் நிதி பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Comments