சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றார் நோமட்லேண்ட் படத்தை இயக்கிய சீனப்பெண் இயக்குனர் க்ளோயி சாவ்
நோமட்லேண்ட் படத்தை இயக்கிய சீனப்பெண் இயக்குனர் க்ளோயி சாவ் (chloe zhaov) சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றார்.
93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தினர்கள் பங்கேற்றனர்.
விழாவுக்கு அழைக்கப்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது.
நோமாட் லேண்ட் படத்தை இயக்கிய சீனப் பெண் இயக்குனர் க்ளோயி சாவ் சிறந்த இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்கர் விருது பெறும் இரண்டாவது பெண் இயக்குனர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை “promising young woman படத்திற்காக எமரால்டு ஃபென்னல் வென்றார்
ஒரு கதையிலிருந்து தழுவல் செய்யப்பட்ட திரைக்கதைக்கான விருதை the father படத்திற்காக படத்தின் இயக்குனர் ஃபுளோரியன் ஜென்னர் பெற்றுக் கொண்டார்
டென்மார்க் நாட்டின் Another round சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது.
சிறந்த குணச்சித்திர துணை நடிகராக டேனியல் கலூயா தேர்வு செய்யப்பட்டார்.
பிரபல ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் Tenet படத்திற்கு சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவில் விருது வழங்கப்பட்டது.
Comments