பிஎம்-கேர்ஸ் நிதியில் இருந்து நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படும் என்றும் இதற்கான நிதியை பிரதமரின் அறக்கட்டளையான பி.எம்.கேர்ஸ் மூலம் ஒதுக்க இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஆக்சிஜன் இறக்குமதிக்கான சுங்க வரிகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளதுடன் மருத்துவத் தேவைகள் அன்றி இதர தேவைகளுக்காக எஃகு ஆலைகள் திரவ ஆக்சிஜனை விநியோகம் செய்வதற்குத் தடை விதித்துள்ளது.
மேலும் உள்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 162 ஆலைகள் உட்பட மொத்தம் 551 ஆலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான ஆக்சிஜன் உள்ளூரிலேயே கிடைக்கும் வகையில் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments