ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க, முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான விரிவான பிரமான பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
காலை 9.15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்தும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி மற்றும் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments