தலைநகர் டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு
டெல்லியில் சனி , ஞாயிறு ஊரடங்கு இன்று காலையுடன் முடிவடையும் நிலையில், இன்று முதல் மேலும் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. அதேசமயம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சனிக்கிழமை இரவு தொடங்கி திங்கட்கிழமை அதிகாலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு மே 3ம் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments