புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்: டீக்கடைகள், உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி
புதுச்சேரியில் மறு உத்தரவு வரும் வரை, மதுபான பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனாதடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, உணவு விடுதிகள் - தேனீர் கடைகள், மதுபான கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
கோவில்களில் பொது வழிபாட்டுக்கு தடை விதித்த புதுச்சேரி அரசு, மால்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் இயங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளது. அதேநேரம், காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வழக்கம் போல் திறந்திருக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Comments