இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 27ம் தேதி முதல் 4 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு

0 4441
இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 27ம் தேதி முதல் 4 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு

இமாச்சலப் பிரதேசத்தில் வரும் 27ம் தேதி முதல் 4 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள கங்ரா,உனா,சோலன் மற்றும் சிர்மோர்ஆகிய மாவட்டங்களில் வரும் 27 முதல் மே 10 ம் தேதி வரை இரு வார ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்திற்குள் நுழைபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments